விடுவதற்கு கற்றுக் கொள்ளுதல் - எல்லா அடையாளங்களையும்
இந்த உடல் பிறப்பதற்கு முன், இந்த உலகம், உயிர்கள் மற்றும் பொருள்கள் இருந்தன
இந்த உடல் மறைந்த பின்பும், இந்த உலகம், உயிர்கள் மற்றும் பொருள்கள் இருக்கும்
உடல் பிறந்த பொழுது எதையும் கொண்டு வரவில்லை. உடல் இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்ல முடியாது
மனதில் இருந்து (நினைவு/எண்ணம்), பொருள்களையும் உயிர்களையும் விடுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்
எது இந்த உடல் பிறப்பதற்கு முன், இங்கு உள்ள உயிர்களையும், பொருள்களையும் வழி நடத்தியதோ, அது இந்த உடல் மறைந்த பின்னும் இங்கு உள்ள உயிர்களையும் பொருள்களையும் வழி நடத்தும்
உலகம் என்பது சத்திரம் (தங்கும் இடம்). உடல் என்பது வழிப்போக்கன். தங்குவதற்கு/இளைப்பாறுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தங்கும் இடத்தை உரிமை கொண்டாட முடியாது
- எல்லா உயிரும் ஒன்றே!
- உயர்வு தாழ்வு அற்று
- விருப்பு வெறுப்பு அற்று
- எல்லா அடையாளங்களையும் (பொருள், பதவி, புகழ், இகழ், அறிவு, அறியாமை) நினைவில் பிடித்துக் கொள்ளாமல் இருத்தல்
- வேண்டுதல் வேண்டாமை அற்று
- யாதனின் யாதனின் நீங்கியான்
- யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
- மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே
- ஆசையா? தேவையா? ஆசை தேவையா?
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
யாதனின் யாதனின் நீங்கியான்; நோதல்
அதனின் அதனின் இலன்
யான், எனது என்னும் செருக்கு அறுப்பான்; வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்