பிறப்பு இறப்பு

எதனுடைய வாழ்க்கை?

  • இது உடலின் வாழ்க்கையா?
  • இது உடலின் மூலமாக, மனம் நடத்தும் வாழ்க்கையா?
  • மனம் இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்?
  • குழந்தையாக(0 - 5 வயது வரை), வாழ்க்கை எப்படி?
  • நினைவு இல்லாத முதியவர்கள் வாழ்க்கை எப்படி?

உடல் உறுப்புகள் - நினைவு

  • உடல் உறுப்புகளுக்கு, நினைவு உண்டா?
  • உடல் உறுப்புகளுக்கு, நினைவு இருந்தால், ஒருவர் கண்கள்/சிறுநீரகம்/..., வேறு ஒருவருக்கு பொருத்த முடியுமா?
  • உடல் உறுப்புகளுக்கு, நினைவு இருந்தால், குழந்தைகள்/முதியவர்கள் வாழ்க்கை அனுபவம்?

தினம் தினம், என் அனுபவம் என்ன?

  • கனவற்ற, ஆழ்ந்த தூக்க நிலை

    • என் அனுபவத்தில், மனம் உள்ளதா?
    • என் அனுபவத்தில், உடல் உள்ளதா?
    • உயிர் உள்ளதா?
  • கனவு நிலை

    • என் அனுபவத்தில், மனம் உள்ளதா?
    • கனவு அனுபவங்களை எந்த உடல் அனுபவித்தது?
    • உயிர் உள்ளதா?
  • விழிப்பு நிலை

    • என் அனுபவத்தில், மனம் உள்ளதா?
    • என் அனுபவத்தில், உடல் உள்ளதா?
    • உயிர் உள்ளதா?
  • தினமும் எது பிறக்கிறது?
  • எது நிலைக்கிறது?
  • எது இறக்கிறது(அடங்குகிறது)?

உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு

ஓர்த்து உள்ளம் உள்ள அது உணரின் ஒருதலையா,

பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு

பிறப்பு என்னும் பேதைமை நீங்க, சிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு

'அவா' என்ப-'எல்லா உயிர்க்கும், எஞ் ஞான்றும்,

தவாஅப் பிறப்பு ஈனும் வித்து'

பற்று அற்றகண்ணே பிறப்பு அறுக்கும்; மற்றும்

நிலையாமை காணப்படும்