செயல்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்;

மற்றைய எல்லாம் பிற

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்;

பெருமை முயற்சி தரும்

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்; எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

பொருள், கருவி, காலம், வினை, இடனொடு ஐந்தும்;

இருள்தீர எண்ணிச் செயல்

எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும்; மனத்தானாம்

மாணா செய்யாமை தலை

நெடு நீர், மறவி, மடி, துயில் நான்கும்;

கெடும் நீரார் காமக் கலன்

  • நெடு நீர் - காலம் தாழ்த்தி செய்வது
  • மறவி - மறதி
  • மடி - சோம்பல்
  • துயில் - தேவைக்கு மீறிய தூக்கம்
  • கெடும் - கெடுகின்ற
  • நீரார் - இயல்புடையவர்
  • காமம் - விரும்பி ஏறும்
  • கலன் - மரப்படகு