உடல்

  • எப்பொழுது உண்ண வேண்டும்?
  • எதை உண்ண வேண்டும்?
  • எவ்வளவு உண்ண வேண்டும்?
  • எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
  • எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும்?

மனம்

  • மனம் என்றால் என்ன?
  • மனம்(நினைவு/எண்ணம்) எப்பொழுது அடங்குகிறது?
  • மனம் (நினைவு/எண்ணம்) எப்பொழுது தோன்றுகிறது?
  • நினைவு/எண்ணம் இல்லாத பொழுது துன்பம் இருந்ததா? இன்பம் இருந்ததா? உயிர் இருந்ததா?
  • எதை எண்ண வேண்டும்?
  • எது தேவையான எண்ணம்?
  • எது தேவையற்ற எண்ணம்?

ஐம்புலன்கள்

  • எதைப் புலன்கள்/கருவிகள் புலப்படுத்துகின்றன?
  • எப்பொழுது புலன்கள்/கருவிகள் புலப்படுத்துகின்றன?
  • மனம் (நினைவு/எண்ணம்) இல்லாமல் புலன்களைப் பயன்படுத்த முடியுமா?
  • எதைப் பார்க்க வேண்டும்? எதைக் கேட்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்?

சொற்கள்

  • எதைச் சொல்ல/பேச வேண்டும்?
  • எப்பொழுது சொல்ல/பேச வேண்டும்?
  • எதைச் சொல்லக்/பேசக் கூடாது?

செயல்

  • எதைச் செய்ய வேண்டும்?
  • எப்பொழுது செய்ய வேண்டும்?
  • எதைச் செய்யக் கூடாது?

சுற்றமும்-நட்பும்

  • யாருடன் பழக வேண்டும்?
  • யாரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்?
  • ஏன்?

தன்னை அறிதல் - ஆராய்தல் - தெளிதல்

  • எவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்?
  • திரும்பிப்பார்த்தல்: நான், தவறுகள் (எண்ணம்/சொல்/செயல்) எனக்கோ, பிறருக்கோ செய்திருக்கிறேனா?
  • எவற்றை, விழிப்புணர்வோடு, திரும்பிப் பார்த்து, தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்?
  • எவைகளை மாற்றிக் கொண்டால், எனக்கு நன்மையைத் தரும்?
  • கோபம்? பயம்? ஆசை? தினமும் ஒரு ஒழுங்கு?
  • மாற்றிக் கொள்ளுதல்: தினமும் எப்படி, பயிற்சி செய்ய வேண்டும்?

நிலையாமை

  • எது நிலையற்ற தன்மையுடையது?
  • பொருள்கள்?
  • நினைவுகள்?
  • உடல்?
  • எது நிலையானது?

விடுவதற்கு கற்றுக் கொள்ளுதல்

  • ஏன் விடுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்?
  • எவற்றை எல்லாம் விடுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்?
  • எப்பொழுது, எவற்றை விடுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்?
  • ஒரே நாளில், மனதில் (நினைவில்/பழக்கம்) இருந்து, விடுவதற்கு முடியமா?
  • விடுவதற்கு, இன்றில் இருந்து கற்றுக் கொள்ள/பழக/பழக்க வேண்டுமா?
  • நானாக விலகிவிட்டால் சுய கட்டுப்பாடு (இன்பம்/சுதந்திரம்). காலம்/சூழ்நிலையினால் விலக்கப்பட்டால் துன்பம்?

பிறப்பு இறப்பு

  • பிறப்பு என்றால் என்ன?
  • இறப்பு என்றால் என்ன?
  • பிறப்பிற்கு முன்? இறப்பிற்குப் பின்?