உரை: மு. வரதராசனார்
Translation: Kavi Yogi Shudhdhanandha Bharati

யானை புலி பசு முதலை பறவை சிங்கம் முயல் மயில் நரி?
QA Home

பீலி-பெய் சாகாடும், அச்சு-இறும்; அப்பண்டம்,
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

Even the gentle peacock's plume
Cart's axle breaks by gross volume.


475     48_வலி_அறிதல்     48_Judging_strength

கால்-ஆழ் களரில், நரி-அடும்; கண்-அஞ்சா
வேல்-ஆள், முகத்த களிறு.

வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்.

A fox can kill a war tusker
Fearless with feet in deep quagmire.


500     50_இடன்_அறிதல்     50_Judging_the_place

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து, இவ்-உலகு.

தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது.

Who gracious are but dutiful
Have right for this earth beautiful.


578     58_கண்ணோட்டம்     58_Benign_looks

குன்று-ஏறி, யானைப்-போர் கண்டற்றால்; தன்-கைத்து-ஒன்று
உண்டாகச் செய்வான் வினை.

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தல், மலையின்மேல் ஏறி, யானைப் போரைக் கண்டாற் போன்றது.

Treasures in hand fulfil all things
Like hill-tuskers the wars of kings.


758     76_பொருள்_செயல்_வகை     76_Way_of_making_wealth

பேர்-ஆண்மை என்ப, தறுகண்; ஒன்று-உற்றக்கால்,
ஊராண்மை மற்று-அதன் எஃகு.

காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

To lift a lance that missed a tusker
Is prouder than shaft that hit a hare.


773     78_படைச்_செருக்கு     78_Military_pride

சிதைவிடத்து ஒல்கார், உரவோர்; புதை-அம்பின்
பட்டுப்-பாடு ஊன்றும் களிறு.

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார்.

Elephants are firm when arrows hit
Great minds keep fit ev'n in defeat.


597     60_ஊக்கம்_உடைமை     60_Energy

பரியது கூர்ங்கோட்டது ஆயினும், யானை
வெரூஉம், புலி தாக்குறின்.

யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

Huge elephant sharp in tusk quails
When tiger, less in form, assails.


599     60_ஊக்கம்_உடைமை     60_Energy

வலி-இல் நிலைமையான், வல்-உருவம் பெற்றம்;
புலியின் தோல்-போர்த்து மேய்ந்தற்று.

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றது.

Vaunting sainthood while weak within
Seems a grazer with tiger skin.


273     28_கூடா_ஒழுக்கம்     28_Imposture

நெடும்-புனலுள், வெல்லும் முதலை; அடும், புனலின்-
நீங்கின், அதனைப் பிற.

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும்; ஆனால் நீரிலிருந்து நீங்கி வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.

In water crocodile prevails
In land before others it fails.


495     50_இடன்_அறிதல்     50_Judging_the_place

தவம்-மறைந்து, அல்லவை செய்தல்; புதல்-மறைந்து
வேட்டுவன், புள் சிமிழ்த்தற்று.

தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தவம் அல்லாத தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

Sinning in saintly show is like
Fowlers in ambush birds to strike.


274     28_கூடா_ஒழுக்கம்     28_Imposture

குடம்பை தனித்து-ஒழியப் புள் பறந்தற்றே;
உடம்பொடு உயிரிடை நட்பு.

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

The soul from body any day
Like bird from egg-shell flies away.


338     34_நிலையாமை     34_Instability

படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்; ஆறும்-
உடையான், அரசருள் ஏறு.

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.

People, troops, wealth, forts, council, friends
Who owns these six is lion of kings.


381     39_இறைமாட்சி     39_The_grandeur_of_monarchy

புகழ்-புரிந்த இல்-இலோர்க்கு இல்லை; இகழ்வார்-முன்
ஏறு-போல் பீடு- நடை.

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை இல்லை.

A cuckold has not the lion-like gait
Before his detractors aright.


59     6_வாழ்க்கைத்துணை_நலம்     6_The_worth_of_a_wife

கை-வேல் களிற்றொடு-போக்கி வருபவன்
மெய்-வேல் பறியா, நகும்.

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில்பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

At the tusker he flings his lance
One in body smiles another chance.


774     78_படைச்_செருக்கு     78_Military_pride

QA Home