தீயினால் சுட்ட-புண், உள்-ஆறும்; ஆறாதே
நாவினால் சுட்ட, வடு.
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும் . ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
The fire-burnt wounds do find a cure
Tongue-burnt wound rests a running sore.
129
13_அடக்கம்_உடைமை
13_Self-control
தீயவை தீய பயத்தலான்; தீயவை,
தீயினும் அஞ்சப்-படும்.
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
Since evil begets evil dire
Fear ye evil more than fire.
202
21_தீவினை_அச்சம்
21_Fear_of_sin
இணர்-எரி தோய்வன்ன இன்னா-செயினும்;
புணரின் வெகுளாமை நன்று.
பல சுடர்களை உடைய பெருநெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமானால் அவன்மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.
308
31_வெகுளாமை
31_Restraining_anger
வினை, பகை என்று-இரண்டின் எச்சம்; நினையுங்கால்,
தீ-எச்சம் போலத் தெறும்.
செய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
Work or foe left unfinished
Flare up like fire unextinguished.
674
68_வினை_செயல்_வகை
68_Modes_of_action
அகலாது, அணுகாது, தீக்-காய்வார் போல்க;
இகல்-வேந்தர்ச் சேர்ந்து-ஒழுகுவார்.
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர்போல இருக்க வேண்டும்.
Move with hostile kings as with fire
Not coming close nor going far.
691
70_மன்னரைச்_சேர்ந்து_ஒழுகல்
70_Walk_with_kings
எரியான் சுடப்படினும், உய்வு-உண்டாம்; உய்யார்,
பெரியார்ப் பிழைத்து-ஒழுகுவார்.
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர்பிழைத்து வாழ முடியும்; ஆற்றல் மிகுந்த பெரியாரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பிப் பிழைக்க முடியாது.
One can escape in fire caught
The great who offends escapes not.
896
90_பெரியாரைப்_பிழையாமை
90_Offend_not_the_great
தீ-அளவு-அன்றித் தெரியான் பெரிது-உண்ணின்;
நோய்-அளவு இன்றிப்-படும்.
பசித்தீயின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால், அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும்.
who glut beyond the hunger's fire
Suffer from untold diseases here.
947
95_மருந்து
95_Medicine
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிரப்பினுள்
யாது-ஒன்றும் கண்பாடு அரிது.
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
One may sleep in the midst of fire
In want a wink of sleep is rare.
1,049
105_நல்குரவு
105_Poverty
சுடச்-சுடரும், பொன்போல் ஒளிவிடும்; துன்பம்
சுடச்சுட, நோற்கிற்-பவர்க்கு.
புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல், தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
Pure and bright gets the gold in fire;
and so the life by pain austere.
267
27_தவம்
27_Penance