உரை: மு. வரதராசனார்
Translation: Kavi Yogi Shudhdhanandha Bharati

பிறர்க்குத் துன்பம் செய்யக்கூடாது? ஏன்?
QA Home

பிறர்க்கு-இன்னா, முற்பகல் செய்யின்; தமக்கு-இன்னா,
பிற்பகல் தாமே-வரும்.

முற்பகலில் மற்றவர்க்குத் துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்.

Harm others in the forenoon
Harm seeks thee in afternoon.


319     32_இன்னா_செய்யாமை     32_non-violence

சிறப்பு-ஈனும் செல்வம் பெறினும்; பிறர்க்கு இன்னா-
செய்யாமை, மாசு-அற்றார் கோள்.

சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

The pure by faith mean pain to none
Though princely wealth by that is won.


311     32_இன்னா_செய்யாமை     32_non-violence

செய்யாமல், செற்றார்க்கும் இன்னாத செய்த-பின்;
உய்யா விழுமம் தரும்.

தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

Revenging even causeless hate
Bad-blood breeds and baneful heat.


313     32_இன்னா_செய்யாமை     32_non-violence

நோய்-எல்லாம், நோய்-செய்தார் மேலவாம்; நோய்-செய்யார்,
நோய்-இன்மை வேண்டுபவர்.

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன. ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர், பிறர்க்குத் துன்பம் செய்யார்.

No harm is done by peace-lovers
For pains rebound on pain-givers.


320     32_இன்னா_செய்யாமை     32_non-violence

QA Home