உரை: மு. வரதராசனார்
Translation: Kavi Yogi Shudhdhanandha Bharati

பேசுதல்? எப்படி? ஏன்?
QA Home

யா-காவார் ஆயினும், நா-காக்க; காவாக்கால்,
சோகாப்பர், சொல்-இழுக்குப்-பட்டு.

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

Rein the tongue if nothing else
Or slips of tongue bring all the woes.


127     13_அடக்கம்_உடைமை     13_Self-control

தீயினால் சுட்ட-புண், உள்-ஆறும்; ஆறாதே
நாவினால் சுட்ட, வடு.

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும் . ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

The fire-burnt wounds do find a cure
Tongue-burnt wound rests a running sore.


129     13_அடக்கம்_உடைமை     13_Self-control

சொல்லுக, சொல்லில் பயன்-உடைய! சொல்லற்க,
சொல்லில் பயன்-இலாச் சொல்!

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும்; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.

To purpose speak the fruitful word
And never indulge in useless load.


200     20_பயன்_இல_சொல்லாமை     20_Against_vain_speaking

இனிய உளவாக இன்னாத கூறல்;
கனி இருப்ப, காய் கவர்ந்தற்று.

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

Leaving ripe fruits the raw he eats
Who speaks harsh words when sweet word suits.


100     10_இனியவை_கூறல்     10_Sweet_words

அல்லவை தேய, அறம் பெருகும்; நல்லவை-
நாடி, இனிய சொலின்.

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

His sins vanish, his virtues grow
Whose fruitful words with sweetness flow.


96     10_இனியவை_கூறல்     10_Sweet_words

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்; யார்மாட்டும்
இன்புறூஉம் இன்-சொலவர்க்கு.

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

Whose loving words delight each one
The woe of want from them is gone.


94     10_இனியவை_கூறல்     10_Sweet_words

QA Home