அகழ்வாரைத் தாங்கும் நிலம்-போல, தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.
151
16_பொறை_உடைமை
16_Forgiveness
ஒறுத்தார்க்கு, ஒரு-நாளை இன்பம்; பொறுத்தார்க்குப்,
பொன்றும் துணையும் புகழ்.
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.
156
16_பொறை_உடைமை
16_Forgiveness
நெடு-நீர், மறவி, மடி, துயில்; நான்கும்
கெடும்-நீரார், காமக் கலன்.
காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
To lag, forget, idle and doze
These four are pleasure boats of loss.
605
61_மடி_இன்மை
61_Freedom_from_sloth
மடியை, மடியா ஒழுகல்; குடியைக்
குடியாக, வேண்டுபவர்!
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும்.
To make your home an ideal home
Loath sloth as sloth; refuse it room.
602
61_மடி_இன்மை
61_Freedom_from_sloth
தன்னைத்-தான் காக்கின், சினம்-காக்க! காவாக்கால்,
தன்னையே கொல்லும், சினம்.
ஒருவன் தன்னைத்தான் காத்துக்கொள்வதானால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்; காக்காவிட்டால் சினம் தன்னையே அழித்துவிடும்.
Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.
305
31_வெகுளாமை
31_Restraining_anger
சினம்-என்னும் சேர்ந்தாரைக்-கொல்லி; இனம்-என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு, ஒருவனுக்கு இனம் என்னும் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
Friend-killer is the fatal rage
It burns the helpful kinship-barge.
306
31_வெகுளாமை
31_Restraining_anger
சினத்தைப் பொருள்-என்று கொண்டவன் கேடு;
நிலத்து-அறைந்தான் கை-பிழையாதற்று.
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப் பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும்.
The wrath-lover to doom is bound
Like failless-hand that strikes the ground.
307
31_வெகுளாமை
31_Restraining_anger
இணர்-எரி தோய்வன்ன இன்னா-செயினும்;
புணரின் வெகுளாமை நன்று.
பல சுடர்களை உடைய பெருநெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமானால் அவன்மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
Save thy soul from burning ire
Though tortured like the touch of fire.
308
31_வெகுளாமை
31_Restraining_anger