உரை: மு. வரதராசனார்
Translation: Kavi Yogi Shudhdhanandha Bharati

தூய்மை?
QA Home

மனம்-தூய்மை, செய்-வினை தூய்மை; இரண்டும்
இனம்-தூய்மை, தூவா வரும்.

மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.

Purity of the thought and deed
Comes from good company indeed.


455     46_சிற்றினம்_சேராமை     46_Avoiding_mean_company

உள்ளியது எய்தல் எளிதுமன்; மற்றும்-தான்
உள்ளியது உள்ளப்-பெறின்.

ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

Easy it is a thing to get
When the mind on it is set.


540     54_பொச்சாவாமை     54_Unforgetfulness

புறம்-தூய்மை, நீரால் அமையும்; அகம்-தூய்மை,
வாய்மையால் காணப்படும்.

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும்; அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

Water makes you pure outward
Truth renders you pure inward.


298     30_வாய்மை     30_Veracity

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்-சொல்; நான்கும்
இழுக்கா இயன்றது, அறம்.

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

Four ills eschew and virtue reach,
Lust, anger, envy, evil-speech.


35     4_அறன்_வலியுறுத்தல்     4_The_power_of_virtue

கண்-நின்று, கண்-அறச் சொல்லினும்; சொல்லற்க,
முன்-இன்று பின்-நோக்காச் சொல்.

எதிரே நின்று கணணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

Though harsh you speak in one's presence
Abuse is worse in his absence.


184     19_புறம்_கூறாமை     19_Against_slander

நெடு-நீர், மறவி, மடி, துயில்; நான்கும்
கெடும்-நீரார், காமக் கலன்.

காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

To lag, forget, idle and doze
These four are pleasure boats of loss.


605     61_மடி_இன்மை     61_Freedom_from_sloth

QA Home