உரை: மு. வரதராசனார்
Translation: Kavi Yogi Shudhdhanandha Bharati

என்னை எப்படி உயர்த்திக் கொள்வது?
QA Home

வெள்ளத்து அனைய, மலர்-நீட்டம்; மாந்தர்-தம்
உள்ளத்து அனையது, உயர்வு.

நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும்; மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

Water depth is lotus height
Mental strength is men's merit.


595     60_ஊக்கம்_உடைமை     60_Energy

உள்ளியது எய்தல் எளிதுமன்; மற்றும்-தான்
உள்ளியது உள்ளப்-பெறின்.

ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

Easy it is a thing to get
When the mind on it is set.


540     54_பொச்சாவாமை     54_Unforgetfulness

முயற்சி, திருவினை ஆக்கும்; முயற்று-இன்மை,
இன்மை புகுத்தி-விடும்.

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும்.

Industry adds prosperity
Indolence brings but poverty.


616     62_ஆள்வினை_உடைமை     62_Manly_effort

தெய்வத்தான் ஆகாது-எனினும்; முயற்சி, தன்-
மெய்-வருத்தக் கூலி-தரும்.

ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

Though fate is against fulfilment
Hard labour has ready payment.


619     62_ஆள்வினை_உடைமை     62_Manly_effort

அருமை உடைத்து-என்று, அசாவாமை வேண்டும்;
பெருமை, முயற்சி தரும்.

இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

Feel not frustrate saying "Tis hard".
Who tries attains striving's reward.


611     62_ஆள்வினை_உடைமை     62_Manly_effort

QA Home