உரை: மு. வரதராசனார்
Translation: Kavi Yogi Shudhdhanandha Bharati

நினைத்ததை அடைவது எப்படி?
QA Home

உள்ளியது எய்தல் எளிதுமன்; மற்றும்-தான்
உள்ளியது உள்ளப்-பெறின்.

ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

Easy it is a thing to get
When the mind on it is set.


540     54_பொச்சாவாமை     54_Unforgetfulness

தெய்வத்தான் ஆகாது-எனினும்; முயற்சி, தன்-
மெய்-வருத்தக் கூலி-தரும்.

ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

Though fate is against fulfilment
Hard labour has ready payment.


619     62_ஆள்வினை_உடைமை     62_Manly_effort

எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார்
திண்ணியர் ஆகப்-பெறின்.

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

The will-to-do achieves the deed
When mind that wills is strong indeed.


666     67_வினைத்_திட்பம்     67_Powerful_acts

QA Home