எப்பொருள், யார்-யார்-வாய்க் கேட்பினும்; அப்பொருள்
மெய்ப்பொருள், காண்பது; அறிவு.
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
To grasp the Truth from everywhere
From everyone is wisdom fair.
423
43_அறிவுடைமை
43_The_possession_of_knowledge
எப்-பொருள், எத்-தன்மைத்து ஆயினும்; அப்-பொருள்,
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.
Knowledge is Truth of things to find
In every case of every kind.
355
36_மெய்_உணர்தல்
36_Truth_consciousness
கற்க, கசடு-அற, கற்பவை; கற்ற-பின்,
நிற்க, அதற்குத் தக!
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
Lore worth learning, learn flawlessly
Live by that learning thoroughly.
391
40_கல்வி
40_Education
தொட்டனைத்து ஊறும், மணற்-கேணி; மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும், அறிவு.
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
As deep you dig the sand spring flows
As deep you learn the knowledge grows.
396
40_கல்வி
40_Education