நா நெகிழ் பயிற்சி

நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள் tongue twisters in tamil:

  1. வாழைப்பழம் 🍌வழுக்கி 😒ஏழைக்கிழவி
    ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்

2. கிழட்டு கிழவன் வியாழக்கிழமை 
      வாழைப் பழத்தில் 🍌வழுக்கி 
                  விழுந்தான்😬


3. ஓடற நரியில ஒரு நரி கிழ
        நரி கிழநரி முதுகுல ஒரு
           பிடி நிறைய மயிர்


4. ப்ளூ லாரி 🚜 உருளுது 😅பிரளுது.


5.      பழுத்த கிழவி
     கொழுத்த மழையில்☔
      வழுக்கி விழுந்தாள்


6.  கொக்கு நெட்ட  கொக்கு,
    நெட்ட கொக்கு இட்ட முட்ட
               கட்ட முட்ட.


7. யார் தச்ச சட்டை 👕 எங்க
    தாத்தா தச்ச சட்டை


8. ரெண்டு செட்டுச் சோள தோசையிலே 🍳
        ஒரு செட்டு 🎋 சோள 🍳 தோசை 
          சொந்த சோள தோசை 🎋


9. பச்சை 🍀 நொச்சை 
    கொச்சை பழி 
    கிழி முழி 
    நெட்டை குட்டை 
    முட்டை ஆடு  🐐
     மாடு 🐄 மூடு 


10.    கடலோரத்தில் அலை 
      உருளுது 😆 பிரளுது
தத்தளிக்குது தாளம் போடுது 😆


11. மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்

       பெய்யா மெய்யா மழை☔


12. ஆடுற கிளையில 🌳ஒரு
      கிளை 🌿தனிக்கிளை 
      தனிக்கிளை தனில் வந்த
      கனிகளும் 🍎🍐🍊இனிக்கல


13. உளி பெருகு சிலை அழகு😍
     அலை உலவு கடல் ⛴ அழகு


14. “வீட்டு கிட்ட கோரை
     வீட்டு மேல கூரை
     கூரை மேல நாரை”


15. “ஒரு கை எடுக்க
      மறு கை கொடுக்க
      பிற கை மடக்க
      பல கை அடக்க
      வடக்கே போனான் கடுக்கன்”


16. கல்லு முள்ளு தாண்டி
     மெல்ல வெல்ல ஏகும்
     நல்ல செல்லப் பிள்ளையே
     நில்லு சொல்லு செல்லு 


17. ஏணி மேல கோணி🧵,
     கோணி மேல குண்டு,
     குண்டு மேல புல்லு,
     புல்லுக்குள்ள பூச்சி🐝,
     எது என கேட்ட ஆச்சி
     விட்டது ஆயுள் மூச்சி.


18. புட்டும் புது புட்டு🥣
     தட்டும் புது தட்டு
     புட்டை கொட்டிட்டு🍮
     தட்டைத் தா 


19. கும்பகோணத்தில் குரங்குகள்🐒
      குச்சியால் குத்தியதால்
      குரங்குகள் குளத்தில்
      குபீரென குதித்து கும்மாளமிட்டன 


20. குலை குலையாய்
      வாழைப்பழம்🍌
      மழையில் அழுகி
      கீழே விழுந்தது🍌