கவிஞர் கண்ணதாசன்

Kannadasan

  1. https://en.wikipedia.org/wiki/Kannadasan
  2. https://tamilnation.org/hundredtamils/kannadasan.htm

மயக்கமா? கலக்கமா?

மயக்கமா? கலக்கமா??
மனதிலே, குழப்பமா?
வாழ்க்கையில், நடுக்கமா?

வாழ்க்கை என்றால், ஆயிரம் இருக்கும்!
வாசல் தோறும், வேதனை இருக்கும்!!

வந்த துன்பம், எது வந்தாலும்
வாடி நின்றால், ஓடுவதில்லை!
வாடி நின்றால் ஓடுவதில்லை!!

எதையும் தாங்கும், இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும், அமைதி இருக்கும்!!

மயக்கமா? கலக்கமா??
மனதிலே, குழப்பமா?
வாழ்க்கையில், நடுக்கமா?

ஏழை மனதை, மாளிகையாக்கி
இரவும் பகலும், காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில், அமைதியைத் தேடு!
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!!

நினைப்பதெல்லாம், நடந்துவிட்டால்!

நினைப்பதெல்லாம், நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே, நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை!!
முடிந்த கதை, தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!
தொடர்ந்த கதை, முடிவதில்லை, மனிதன் வீட்டினிலே!!

நினைப்பதெல்லாம், நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே, நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை!!

ஆயிரம் வாசல், இதயம்! அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்!!
யாரோ வருவார், யாரோ இருப்பார்! வருவதும் போவதும் தெரியாது!!
ஒருவர் மட்டும், குடியிருந்தால், துன்பம் ஏதுமில்லை!
ஒன்றிருக்க, ஒன்று வந்தால், என்றும் அமைதியில்லை!!

நினைப்பதெல்லாம், நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே, நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை!!

எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே, எவ்விதம் முடியும்!
இதுதான் பாதை, இதுதான் பயணம், என்பது யாருக்கும் தெரியாது!!
பாதையெல்லாம் மாறிவரும், பயணம் முடிந்துவிடும்!
மாறுவதைப் புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்துவிடும்!!

நினைப்பதெல்லாம், நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே, நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை!!

---கவிஞர் கண்ணதாசன்.

கடைசி வரை?

வீடு வரை, உறவு!
வீதி வரை, மனைவி!!

காடு வரை, பிள்ளை!
கடைசி வரை, யாரொ?

The kin, till the house!
The wife, till the street!!

The son, upto the cemetery!
Who will come beyond that?

---கவிஞர் கண்ணதாசன்.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

---பட்டினத்தார்

மனிதன் என்பவன், தெய்வம் ஆகலாம்!

மனிதன் என்பவன், தெய்வம் ஆகலாம்!
மனிதன் என்பவன், தெய்வம் ஆகலாம்!!

வாரி வாரி வழங்கும் போது, வள்ளல் ஆகலாம்!
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்!!

உருகி ஓடும் மெழுகை போல, ஒளியை வீசலாம்!
மனிதன் என்பவன், தெய்வம் ஆகலாம்! தெய்வம் ஆகலாம்!!

ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம், சிலைகள் ஆகலாம்!
உறவுக்கென்று விரிந்த உள்ளம், மலர்கள் ஆகலாம்!!

ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம், சிலைகள் ஆகலாம்!
உறவுக்கென்று விரிந்த உள்ளம், மலர்கள் ஆகலாம்!!

யாருக்கென்று அழுத போதும், தலைவன் ஆகலாம்!
மனம், மனம், அது கோவில் ஆகலாம்!!

மனிதன் என்பவன், தெய்வம் ஆகலாம்!
மனிதன் என்பவன், தெய்வம் ஆகலாம்!!

மனமிருந்தால் பறவை கூட்டில், மான்கள் வாழலாம்!
வழியிருந்தால் கடுகுக்குள்ளே, மலையைக் காணலாம்!!

மனமிருந்தால் பறவை கூட்டில், மான்கள் வாழலாம்!
வழியிருந்தால் கடுகுக்குள்ளே, மலையைக் காணலாம்!!

துணிந்து விட்டால் தலையில், எந்த சுமையும் தாங்கலாம்!
குணம், குணம், அது கோவில் ஆகலாம்!!

மனிதன் என்பவன், தெய்வம் ஆகலாம்!
மனிதன் என்பவன், தெய்வம் ஆகலாம்!!

வாரி வாரி வழங்கும் போது, வள்ளல் ஆகலாம்!
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்!!

உருகி ஓடும் மெழுகை போல, ஒளியை வீசலாம்!
மனிதன் என்பவன், தெய்வம் ஆகலாம்! தெய்வம் ஆகலாம்!!

---கவிஞர் கண்ணதாசன்